விளையாட்டு திருவிழா - 22.11.2018 - இந்தியா Vs ஆஸி - நாளை 2வது டி20 போட்டி
பதிவு : நவம்பர் 22, 2018, 08:13 PM
விளையாட்டு திருவிழா - 22.11.2018 - உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் தொடர்
விளையாட்டு திருவிழா - 22.11.2018

இந்தியா Vs ஆஸி - நாளை 2வது டி20 போட்டி - வாழ்வா? சாவா?  கட்டத்தில் இந்திய அணி
இந்தியா, ஆஸதிரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸதிரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். இதனால் கோலி தலைமையிலான இந்திய அணி கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சோபிக்க தவறிய குர்னல் பாண்டியாவுக்கு பதில் வாசிங்டன் சுந்தர் அல்லது சாஹல்   களமிறங்க வாய்ப்பு உள்ளது. பேட்டிங் வரிசையில் விராட் கோலி தான் மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும். ராகுலுக்காக கோலி தன் இடத்தை விட்டு தரக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. கடந்த போட்டியில் விராட் கோலி, 4வது இடத்தில் இறங்கி 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் தனது வழக்கமான அதிரடியை காட்டியிருந்தால் போட்டியின் முடிவே மாறி இருக்கும். கே.எல். ராகுல் டி T20 போட்டியில் 2 சதங்கள் விளாசி இருந்தாலும், அனைத்து போட்டிகளிலும் அவர் ரன் சேர்ப்பதில்லை. . இதனால் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கலாம். இந்தப் போட்டி நாளை இந்திய நேரப்படி மதியம் 1.20 மணிக்கு மெல்போர்னில் தொடங்குகிறது. 


உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் தொடர் - தீபா கர்மாகர் உள்ளடங்கிய இந்திய அணி பங்கேற்பு
உலகக் கோப்பை ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் தொடர் ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்த தொடர் தகுதிச் சுற்றாக அமையும் என்பதால், உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் களமிறங்குகின்றனர். இந்தியா சார்பாக நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர், அருணா ரெட்டி, ஆஷிஸ் குமார், ராகேஷ் பத்ரா ஆகிய 4 பேர் கலந்து கொள்கின்றனர். இதில் தீபா கர்மார் வெற்றி பெற்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமடைந்த தீபா கர்மாகர், ஆசிய போட்டியில் பெரிதளவில் சாதிக்க முடியவில்லை. இதனால் இந்த தொடர் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பபப்படுகிறது. தீபா கர்மாகரை தவிர, ஆஷிஸ் குமார், அருணா ரெட்டி ஆகியோர், பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. 

மழையால் தடைப்படாத விளையாட்டுகள் - ரசிகர்களின் குஷிக்கு தடைப்போடாத மழை
கொஞ்சம் மழை கொட்டினாலே கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டு, போட்டியே கைவிடப்படும். ஆனால், எவ்வளவு மழை கொட்டினாலும் சற்றும்  போட்டி தடைப்படாமல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் போட்டிகள் நிறைய உண்டு. கிரிக்கெட்டை போலவே இருக்கும் BASEBALL விளையாட்டில் மழை கொட்டினாலும், இடி இடித்தாலும் போட்டி நிறுத்தப்படாது. RUGBY ஆட்டத்தில் மழை பெய்தால் தான் போட்டியில் விறுவிறுப்பு அதிகரிக்குமாம்..  இதனால் மழை பெய்ய வேண்டும் என்று ரசிகர்களே பிரார்த்தனையில் ஈடுபடுவார்களாம்.மழை பெய்தால் வீரர்களுக்கு கடும் சிரமத்தை அளிக்கும் மற்றொரு போட்டி மோட்டோ ஜி.பி. உள்ளிட்ட பைக் பந்தயங்கள். மழை பெய்தால் வீரர்கள், விபத்தில் அதிகளவில் சிக்குவார்கள். தடகள போட்டிகளும் மழையால் நிறுத்தப்படாது.. மழை எவ்வளவு கொட்டினாலும்.. நனைந்தப்படியே வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பார்கள். இதே போன்று BEACH VOLLEYBALL போட்டியும், குதிரை பந்தயமும் மழையில் நிறுத்தப்படாது. ஐஸ் ஹாக்கி போட்டியும் மழையால் கைவிடப்படாது. இறுதியில் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு தான்.. மழை கொட்டினாலும் கால்பந்து போட்டி நிறுத்தப்படாது.. மழை பெய்தால், வீரர்களுக்கு தான் சிக்கல், ஆனால் பார்வையாளர்களுக்கு குஷி தான்.. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.