விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து
பதிவு : நவம்பர் 14, 2018, 08:13 PM
விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கேப்டனாகிறாரா ஹிட் மேன் ரோஹித் சர்மா?
விளையாட்டு திருவிழா - 14.11.2018

கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களை பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறி விடு என்று ரசிகர் ஒருவரின் விமர்சனத்துக்கு அண்மையில் கோலி காட்டமாக பதில் அளித்தார். இதனால் விராட் கோலி மீது பி.சி.சி.ஐ. முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், பயிற்சியாளர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கோலி தலையீடு இருந்ததால், பி.சி.சி.ஐ.யின் முக்கிய புள்ளிகள் கோலி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இந்த நிலையில், கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக பதவியில் அமர்த்தலாம் என்று பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.கோலியை விட, கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவதாகவும், கோலி இல்லாமலேயே ஆசிய கோப்பையை ரோஹித் சர்மா வென்றுவிட்டதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து கூற்றுகள் வைக்கப்பட்டுள்ளன.ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா இதுவரை 12 டி20 போட்டியில் களமிறங்கி 11 போட்டியில் வென்றுள்ளது. மேலும் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களை முழுமையாக 3க்கு0 என்ற கணக்கில் ரோஹித் சர்மா வென்றுள்ளார். ஆசிய கோப்பையிலும் ரோஹித் தலைமையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது. இது தவிர, ஐ.பி.எல். தொடர்களில் கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மும்பைக்கு சாம்பியன் பட்டத்தையும் மூன்று முறை பெற்று தந்துள்ளார். ஆனால் கோலி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்று தந்தில்லை. இதனால் கோலியை விட ரோஹித் தான் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இதனால், முதல்கட்டமாக கோலியை டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 24.10.2018 - சச்சினின் உலக சாதனையை முறியடித்த கோலி

விளையாட்டு திருவிழா - 24.10.2018 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.

20 views

விளையாட்டு திருவிழா 04.09.2018 - ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் குக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு இலக்கணம் அலெஸ்டர் குக்.

22 views

விளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி

ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.

47 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா (12.12.2018) : டாஸ் போடுவதில் புதிய மாற்றம் - இனி நாணயத்திற்கு பதில் பேட்

விளையாட்டு திருவிழா (12.12.2018) : 37வது பிறந்தநாளை கொண்டாடும் யுவ்ராஜ்

67 views

விளையாட்டு திருவிழா (10.12.2018) - அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டம் கண்ட ஆஸி

விளையாட்டு திருவிழா (10.12.2018) - வரலாற்று சாதனை படைத்த இந்தியா

16 views

விளையாட்டு திருவிழா (07.12.2018) - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

விளையாட்டு திருவிழா (07.12.2018) - அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்

41 views

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

11 views

விளையாட்டு திருவிழா (05.12.2018) - WWE போட்டியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு!

விளையாட்டு திருவிழா (05.12.2018) - இந்தியா Vs ஆஸி - நாளை முதல் டெஸ்ட்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.