விளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்
விளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா
x
விளையாட்டு திருவிழா - 12.11.2018 

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே. வீரர்கள் யாரும் இல்லாததால் தமிழக ரசிகர்களிடையே ஏமாற்றம் நிலவியது. டாஸ் வென்று முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேlட்டிங் செய்தது. பவர்பிளே முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் டேரன் பிராவோ, பூரான் ஜோடி இணைந்து 43 பந்துகளில் 87 ரன்கள் குவித்தது. 20 ஓவர் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 181 ரன்கள் குவித்தது.182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல்சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தவான், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 130 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், இருவரும் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைபட்ட நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஃபில்டிங்கில் செய்த தவறால் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் முறையாக சர்வதேச டி 20 போட்டியில் ரிஷப் பந்த் சதம் விளாசினார். இதனால் தோனிக்கு பதில் களமிறங்கிய ஒரு இளம் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை நிம்மதி அடைய செய்தது.  

பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்

பிரேசிலில் நடைபெற்ற ஃபார்முலா ஓன் கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார். சாவோ பாலோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முன்னணி வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.தொடர்ந்து 2 பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டேப்பனின் கார், இந்தப் போட்டியின் போது விபத்தில் சிக்கியது. இருப்பினும் விபத்திலிருந்து மீண்டு வந்த வெர்ஸ்டேப்பன், நட்சத்திர வீரர் விட்டலை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தில் பந்தயத்தை நிறைவு செய்தார். 305 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 27 நிமிடம் 9 விநாடிகளில் கடந்து பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பந்தயத்தை ஹாமில்டன் முதலிடத்திலிருந்து தொடங்கி இருந்தார். சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து ஹாமில்டன் , தனது அணியினரிடம் உற்சாகமாக கொண்டாடினார். 




Next Story

மேலும் செய்திகள்