விளையாட்டு திருவிழா - 05.11.2018 : மோட்டோ ஜிபி மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்
பதிவு : நவம்பர் 05, 2018, 08:29 PM
விளையாட்டு திருவிழா - 05.11.2018 : உயிருக்கு ஆபத்தான 'மரணக் கிணறு' விளையாட்டு
பைக் மீது என்றும் இளைஞர்களுக்கு தனி மோகம் உண்டு. உலகளவில் நடைபெறும் பந்தயங்களில் மோட்டோ ஜி.பி. பந்தயங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற மோடோ ஜி.பி. பந்தயம் குறித்து தற்போது காணலாம். மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தின் விறுவிறுப்பான சுற்று மலேசியாவில் நடைபெற்றது. 

செப்பாங் ஓடுதளத்தில் நடத்தப்பட்ட இந்த சுற்றை நடப்பு சாம்பியனும், இந்த ஆண்டு சாம்பியனுமான இத்தாலி வீரர் மார்க் மார்க்வெஸ் கைப்பற்றினார். ஜப்பானில் இன்னும் ஒரு சுற்று எஞ்சியுள்ள நிலையில் கடந்த மாதமே மார்க்வெஸ் தனது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். இந்த தொடரில் இதுவரை 321 புள்ளிகள் பெற்றுள்ளார். வழக்கம் போல், இந்த சுற்றிலும் பல்வேறு விபத்துகளும் அரங்கேறின. 

சீனாவின் தற்காப்பு விளையாட்டு : 'வூசூ'

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் எனப்படும் Martial arts வகையில் ஒன்றானது தான் சீன 'வூசூ' கராத்தே போல் உள்ள இந்த கலை தற்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. "சைனீஸ் கும்பூ" என்று அழைக்கப்படும் "வூசூ" என்ற தற்காப்பு கலை சீன நாட்டில் உருவானதாகும். 'ஜெட் லீ', வூசூ விளையாட்டின் வெற்றி வீரர்களுள் ஒருவராக திகழ்ந்தவராவார். வூசூ போட்டி  taolu மற்றும் sanda இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது. taolu வில் பாரம்பரிய தற்காப்பு கலைகளும், sanda வில் தற்கால தற்கால தற்காப்பு கலைகளும் இடம்பெறுகின்றன. "உலக வூ சூ சாம்பியன்ஷிப்" போட்டி 1991ம் ஆண்டு சீன தலைநகரான பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இன்றும் நடைபெற்று வருகிறது.சர்வதேச ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ''வூ சூ" தற்காப்பு கலையை  விரைவில் ஒலிம்பிக் போட்டியிலும் எதிர்பார்க்கலாம் என சொல்கிறார்கள். 


தமிழகத்தில் பிரபலமாகாத "கர்லிங்" விளையாட்டு

குளிர்கால விளையாட்டு போட்டிகளில் ஓன்றான 'கர்லிங்' விளையாட்டு. கர்லிங் என்றாலே HAIR STYLE-ஐ குறிக்கும். ஆனால் இந்த விளையாட்டு ஒரு வினோதமானது. கர்லிங் என்ற இவ்விளையாட்டு பனித் தரையில் நடப்பதாகும். பனித்தரையின் நடுவே, ஒரே மையத்தைக்கொண்ட  நான்கு வளையங்கள் இருக்கும். குறிப்பிட்ட தொலைவில் இருந்து , வழுவழுப்பான கிரானைட் கல்லை வளையத்தை நோக்கி நகர்த்த வேண்டும். வளையத்தின் மையத்தை, கிரானைட் கல் எவ்வளவு நெருக்கமாக அடைகிறதோ அந்த அளவை வைத்து வெற்றிப்புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன.
 
கிரானைட் கல் வழுவழுப்பாக சென்று சேர, பனித்தரையை இரண்டு பேர் தேய்த்தொண்டே செல்வர். இரண்டு அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் அணிக்கு நான்கு வீரர்கள் பங்குபெறுவர். இவ்விளையாட்டில் 8 கற்கள் பயன்படுத்தப்படும்.ஒவ்வொருவருக்கும் 2 கிரானைட் கற்கள் ஒதுக்கப்படுகிறது. 'கர்லிங்' என்ற விளையாட்டு ஸ்காட்லாந்து நாட்டில் 16ம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்திலிருந்ததாக கருதப்படுகிறது. எனினும் கர்லிங் விளையாட்டின் முதல் உலக சாம்பியன்ஷிப் 1959 ஆண்டு தான்  ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. தற்போது பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு அதிகம் பிடித்த விளையாட்டாக கர்லிங் மாறி வருகிறது. கர்லிங் விளைாட்டு, 1998ம் ஆண்டு தான் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் குழுவினர், பெண் குழுவினர், கலப்பு குழுவினர் என எப்படி வேண்டுமானாலும் இவ்விளையாட்டில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்தது முதலே, ஆண்கள் பிரிவிற்கான கர்லிங் விளையாட்டில் கனடா நாட்டினர் பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.