விளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்
பதிவு : அக்டோபர் 29, 2018, 08:14 PM
விளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்
அம்பத்தி ராயுடுவும் சதம் விளாசல்
மும்பையில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தவான் 38 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு ரோஹித், தவான் ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் தொடக்க ஜோடியான சேவாக், சச்சினை விட அதிக ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. கேப்டன் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழக்க ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி தனது 21வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்த அவர் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 7வது முறையாக 150 ரன்களுக்கு மேல் கடந்த ரோஹித், சச்சினை விட அதிக சிக்சர் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அம்பத்தி ராயுடு சதம் விளாசி ரன் அவுட் ஆனார். தோனி 23 ரன்களில் வெளியேற 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. 

மெக்சிகோ ஃபார்முலா ஒன் கிராண்ட பிரீ : உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன்
2018ஆம் ஆண்டிற்கான ஃபார்முலா ஒன் கிராண்ட பிரீ உலக சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஹாமில்டன் உறுதி செய்தார். மெக்சிகோ சிட்டி பார்முலா ஓன் பந்தய தளத்தில், முன்னணி வீரர்களான ஹாமில்டனுக்கும், செபாஸ்டியன் விட்டலுக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தப் பந்தயத்தில் விரர்களின் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள கடுமையாக போராடினர். கார்கள் மின்னல் வேகத்தில் சீறி சென்றன. கார்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ALONSO. PEREZ, DANIEL RICCARDIO உள்ளிட்ட வீரர்கள் போட்டியை விட்டு வெளியேறினர். பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 38 நிமிடம் 28 விநாடிகளில் கடந்து நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டேப்பன் முதலிடத்தை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். பந்தயத்தை 4வது இடத்தில் நிவு செய்த பிரிட்டன் வீரர் ஹாமில்டன், உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். இதன் மூலம் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஹாமில்டன் கைப்பற்றினார். 

ஸ்பெயின் மோட்டோ ரேலி கார் பந்தயம் : பிரான்ஸ் வீரர் லோயிப் சாம்பியன்
ஸ்பெயின் மோட்டோ ரேலி கார் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரான்ஸ் வீரர் SEBASTIAN LOEB சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கெட்டோலினாவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில், சாதாரண நெடுஞ்சாலையில், ரேஸ் கார்கள் சீறிப் பாய்ந்தன. இந்தப் பந்தயத்தில் நடப்பு  சாம்பியன் செபாஸ்டியன் ஓகியருக்கும், முன்னாள் சாம்பியனான SEBASTIAN LOEBக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் 2.9 விநாடிகள் முன்னிலை பெற்ற LOEB  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 
9 முறை உலக சாம்பியன்ன LOEB. கடந்த 2012ஆம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், தற்போது மீண்டும் குறிப்பிட்ட பந்தயங்களில் மட்டும் கலந்து கொண்டு தபோதைய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கிறார். 

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் வென்றார். சுவிட்சர்லாந்தின் பாசேல் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோமேனிய வீரர் COPIL-ஐ பெடரர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் 7க்கு6, 6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வென்று  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.  இது ஒட்டுமொத்தமாக பெடரர் கைப்பற்றும் 99வது கோப்பை ஆகும்.

உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : கோப்பையை வென்ற உக்ரைன் வீராங்கனை
உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை உக்ரைன் வீராங்கனை ELINA SVITOLINA கைப்பற்றினார். சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை STEPHENSஐ எதிர்கொண்ட எலினா, 3க்கு6,6க்கு2,6க்கு2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.