விளையாட்டு திருவிழா (19.10.2018) - ஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் இந்தியாவுடன் பலப்பரீட்சை
பதிவு : அக்டோபர் 19, 2018, 09:24 PM
இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறுகிறது.
இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ரஸில் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், அதிரடி வீரர் EWAN LEWIS ம் சொந்த காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

இந்திய அணியை பொறுத்தவரை தவான், ரோஹித், கோலி, தோனி என பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. இளம் வீரர் ரிஷப் பந்த் எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் ஒரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி, இளம் வீரர் கலீல் அகமது ஆகியோரை நம்பியே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு உள்ளது.  ஒருநாள் தொடரிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

டேபிள் டென்னிஸூடன் இணைந்த கால்பந்து "டெக்பால்":

மாறி வரும் உலகத்தில், விளையாட்டுகளும் புதிது புதிதாக தோன்றி வருகின்றன. அந்த வகையில் இன்று நாம் காணப்போவது TEQBALL.. டேபிள் டென்னிசும், கால்பந்தும் சங்கமிக்கும் இடம் தான் இந்த விளையாட்டு..

1970-களில் முதல் முறையாக ஹங்கேரியில் தான் இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது. டேபிள் டென்னிஸ்க்கு பயன்படுத்தப்படும் போர்டுகளில் இருந்து சற்று மாறுதல் செய்யப்பட்ட போர்டு தான் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும்.

இதில் வீரர்கள் கால்பந்தை உதைத்து டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உள்ள விதிகளை பயன்படுத்தி விளையாடுவார்கள்.. ஒரு வீரர் மூன்று முறைக்கு மேல் பந்தை தொடக் கூடாது.. உடலின் ஒரே பாகத்தால் தொடர்ந்து 2 முறை பந்தை தொடக் கூடாது. இது தான் TEQBALL விளையாட்டில் முக்கிய விதியாகும்.  இந்த விளையாட்டு கால்பந்து வீரர்களால் தான் பிரபலமானது. கால்பந்துவீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் TEQBALL விளையாட்டை விளையாடினார்கள். பிரேசில் வீரர் ரொனால்டினோவுக்கு TEQBALL மிகவும் பிடித்த விளையாட்டாக மாறிவிட்டது.

பார்க்கர் விளையாட்டு களமான போர்க்களம் : 

பெரிய சுவர்களை தாண்டுவதும் கட்டங்களை தாண்டி சாகசம் மேற்கொள்வது தான் பார்கர் விளையாட்டு. மிகவும் அபாயகரமான இந்த விளையாட்டு தற்போது பாலஸ்தீன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பபை பெற்றுள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே யுத்தம் தீவிரமடைந்த போது காசா நகரம் தரைமட்டமானது. தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுமைகளை மறக்க, காசா இளைஞர்கள் பார்க்கர் விளையாட்டில் மீது கவனத்தை செலுத்தினர்.  குண்டுகளால் சிண்ணாப் பிண்ணமான கட்டங்களையே தங்களது களமாக்கிய இளைஞர்கள் அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னையில் கோல் மழை :

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11ஆவது லீக் ஆட்டம்  சென்னை ஜவஹர்லால்  நேரு  மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னையின்  எஃப்சி அணியும், நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியும் மோதின.  

ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்திலேயே சென்னை அணியின் ரௌலின் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து 15 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் தாய் சிங் ஒரு கோல் அடித்து அணிக்கு மேலும் வலு சேர்த்தார். 2 கோல் போட்டதால் நார்த் ஈஸ்ட் அணி ஆக்ரோஷமாக விளையாடியது. தொடர்ந்து ஆடிய நார்த் ஈஸ்ட் அணி வீரர் பர்த்லோமி 29 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சென்னைக்கு அதிர்ச்சி அளித்தார்.

இரு அணிகளும் மாற்றி மாற்றி  கோல்  அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் தலா 3 கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

 இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வீரர்க்ள கடுமையாக போராடினர்.ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரௌலின் அற்புதமாக ஒரு கோல் அடித்து சென்னை அணிக்கு மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்தார். இது அந்த அணியின் 4 ஆவது கோல் ஆகும்.

ஆட்டத்தை சமன் செய்ய பலமுறை சென்னை அணி முயன்றும் அது தோல்வியில் முடிந்தது. இறுதியில் நார்த் ஈஸ்ட் அணி 4 -3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.

6 views

விளையாட்டு திருவிழா - 05.11.2018 : மோட்டோ ஜிபி மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்

விளையாட்டு திருவிழா - 05.11.2018 : உயிருக்கு ஆபத்தான 'மரணக் கிணறு' விளையாட்டு

14 views

விளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்

6 views

விளையாட்டு திருவிழா (22.10.2018) - 246 ரன்கள் சேர்த்த கோலி, ரோஹித் ஜோடி

விளையாட்டு திருவிழா (22.10.2018) - மே.இ.தீவுகளை பந்தாடிய இந்திய அணி

13 views

விளையாட்டு திருவிழா - 02.10.2018 - முச்சதம் விளாசிய வீரருக்கு அணியில் இடமில்லை

முச்சதம் விளாசிய வீரருக்கு அணியில் இடமில்லை,கருண் நாயருக்கு வந்த சோதனை

14 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.

6 views

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கேப்டனாகிறாரா ஹிட் மேன் ரோஹித் சர்மா?

532 views

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்

225 views

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்

43 views

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் சேர்ந்த விளையாட்டு

12 views

விளையாட்டு திருவிழா - 08.11.2018 - உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்

விளையாட்டு திருவிழா - 08.11.2018 - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.