விளையாட்டு திருவிழா - (15.10.2018) அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி
பதிவு : அக்டோபர் 15, 2018, 08:42 PM
விளையாட்டு திருவிழா - (15.10.2018) அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி
அர்ஜென்டினா மோட்டார் சூப்பர் பைக்: தொடர்ந்து 10வது முறை ஜோனத்தன் வெற்றி

அர்ஜென்டினாவில் நடைபெற்ற மோட்டார் சூப்பர் பைக் தொடரின் சாம்பியன் பட்டத்தை அயர்லாந்து வீரர் ஜோனத்தன் ரே வெற்றி பெற்றார், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். நடப்பாண்டிற்கான உலக சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே வென்ற ஜோனத்தன் ரே, 2 லேப்களின் முடிவில் 7வது இடத்தில் இருந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்த ஜேனாத்தன் ரே 7வது லேப்களில் முதலிடத்திற்கு முன்னேறி, பந்தயத்தையும் முதலிடத்தில் நிறைவு செய்தார். 

இதன் மூலம் தொடர்ந்து 10 பந்தயங்களை வென்ற ஜோனத்தன் ரே, புதிய சாதனையை படைத்தார். இந்தப் போட்டியின் போது வீரர் ஒருவர் விபத்தில் சிக்கி போட்டியிலிருந்து வெளியேறினார். 


தேசிய அளவிலான கார் பந்தயம் : சீறிப் பாய்ந்த கார்கள் ரசிகர்கள் ஆர்வம்


தேசிய அளவிலான கார் பந்தயத் தொடர் கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்றது, ஜே.கே. டயர்ஸ் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டியின் மூன்றாவது சுற்று கரி மோட்டார் விரைவு சாலை வளாகத்தில் நாடு முழுவதுமிலிருந்து 76 வீரர்கள் பங்கேற்றனர்.  ஈரோ ஜே.கே.18  பிரிவு இறுதிச் சுற்றில் சென்னை வீரர் கார்த்திக் தரன்சிங் வெற்றி பெற்றார். இந்த தொடரை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 


மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி: உடல் கட்டை வெளிப்படுத்திய வீரர்கள்


சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகள் நடைபெற்றது. சேலம், ஓமலூர், ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 232 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 12 பிரிவுகளாகநடைபெற்ற இந்தப் போட்டியில், போட்டியாளர்கள் தங்களது உடல் திறனையும், வலிமையையும் வெளிபடுத்தி காட்டினர்.

மொத்தம் எட்டு வகையிலான உடல் தகுதிகளை ஆய்வுகள் செய்து நடுவர்கள் செய்து மதிப்பெண்களை வழங்கினர்.  ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களின் உடல் தகுதிகளை ஆய்வு செய்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் சிறந்த ஆணழகனாக சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், சிறந்த உடலமைப்பிற்காகவும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாமிடத்தை அம்மாபேட்டை வரதராஜிம், மூன்றமிடத்தை மேட்டூர் தினகரனும் பிடித்து வெற்றிபெற்றனர். இதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் தேர்வு செய்யப்பட்ட 70 பேருக்கு பதக்கம் மற்றும் சாற்றுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

28 views

விளையாட்டு திருவிழா - 24.10.2018 - சச்சினின் உலக சாதனையை முறியடித்த கோலி

விளையாட்டு திருவிழா - 24.10.2018 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.

34 views

விளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி

ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.

69 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

82 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

66 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

31 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

31 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

24 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.