விளையாட்டு திருவிழா - (09.10.2018) - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

விளையாட்டு திருவிழா - (09.10.2018) - இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி : முதல் முறையாக பிரேக் நடனம் சேர்ப்பு
விளையாட்டு திருவிழா - (09.10.2018) - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
x
விளையாட்டு திருவிழா - (09.10.2018)

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி : முதல் முறையாக பிரேக் நடனம் சேர்ப்பு

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக BREAK DANCE போட்டியாக அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அர்ஜென்டினாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆடவர் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த BUMBLEBEE, மகளிர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த RAM  தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. நடனத்தை விளையாட்டாக அங்கீகரித்து இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக நடன கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தப் போட்டியை எப்படி வெற்றி , தோல்வியை நிர்ணயிக்கிறார்கள் தெரியுமா?? நம்ம ஊரில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவர்கள் மார்க் போடுவார்களே அதே மாதிரி தான். கலைஞர்களின் நடன நலினம், இசை, புதுமை, உள்ளிட்டவைகளை வைத்து நடுவர்கள் மதிப்பெண் வழங்குகின்றனர். இது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டால் நிச்சயம் இந்தியா BREAK DANCE ல் தங்கம் வெல்லும் என்பதில் ச்ந்தேகமில்லை.. 

உள்ளூர் கால்பந்து ஆட்டத்தில் ருசிகரம் : ரசிகர்களை கவர்ந்த நாய் சேட்டை

ஜார்ஜியாவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து ஆட்டத்தில் நாய் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.கோரி நகரில் நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் கோல் ஏதும் விழாமல் மந்தமாக சென்றது. இந்த நிலையில், மைதானத்திற்குள் திடீரென்று புகுந்த நாய், அங்கும், இங்கும் ஓடியது.. நாயை பிடிக்க வீரர்கள்,  ஊழியர்கள் எவ்வளவு முயற்சித்தும் அதற்கு பலன் அளிக்கவில்லை. பின்னர் 3 நிமிட போராட்டத்திற்கு பிறகு நாய் வெளியேற்றபட்டது. ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தாலும்.. நாயின் அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே, ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் பல்டி அடித்து அசத்தலாக ஒரு கோல் போட்டு ஒரே நாளில் ஹீரோவானார். அசத்தல் கோல் அடித்த 22 வயதான அட்லயானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

ரசிகர்களை கவரும் கடற்கரை மல்யுத்தம் : மகளிர் பிரிவில் ரொமேனியா ஆதிக்கம்

Beach volleyball போல், தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் விளையாட்டு தான் Beach Wrestling.. கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர, கடற்கரை மணலில் மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வந்தது.  கடந்து 2005ஆம் ஆண்டு முதல் Beach Wrestling ஐ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆடவர் பிரிவினரை விட மகளிர் பிரிவின் BEACH WRESTLING போட்டிக்கு தான் ரசிகர்கள் அதிகம்.. நடப்பாண்டிற்கான சாம்பியன்ஷிப் போட்டி துருக்கி நாட்டின் SARIGERME கடற்கரை பகுதியில் நடந்தது. இந்த தொடரின் மகளிர் பிரிவில் ரொமேனிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர். 50 கிலோ எடைப்பிரிவில் ரொமேனிய வீராங்கனை STEFANIA உள்ளூர் வீராங்கனை SEVIL-ஐ 3க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்இதே போன்று 60 கிலோ எடைப் பிரிவில் இத்தாலி வீராங்கனை FRANCESCA வை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி ரொமேனிய வீராங்கனை KRISTZA தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.மகளிருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் நார்வே வீராங்கனை சாரோலேட்டை 3க்கு1 என்ற புள்ளிகள் கணக்கில் ரொமேனிய வீராங்கனை ADINA ELENA வெற்றி பெற்றார். 90 கிலோ எடைப் பிரிவில் ரொமேனிய வீராங்கனை CATALINA தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனிடையே ஆடவருக்கான 90 கிலோ எடைப் பிரிவில்  பாகிஸ்தான் வீரர் முகமது இமான், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.இந்த தொடரில் 17  நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைள் கலந்து கொண்டனர். MAT களுக்கு பதிலாக கடற்கரையில் நடைபெறும் இந்தப் போட்டியில் மல்யுத்தத்தை போல, எதிர் வீரரை கொட்டை விட்டு தள்ளுவது, மல்யுத்த பிடி மூலம் கீழே தள்ளுவதை வைத்து ள்ளிகள் வழங்கப்படும். 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.  துபாயில் நடைபெற்று வரும் இநத ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 482 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 202 ரன்களுக்கு சுருண்டது. 

 

Next Story

மேலும் செய்திகள்