விளையாட்டு திருவிழா - 28.09.2018

ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? - இந்தியா, வங்கதேசம் இடையே கடும் போட்டி
விளையாட்டு திருவிழா - 28.09.2018
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.  இந்த தொடர் முழுவதும் சொதப்பிய வங்கதேச அணி வீரர்கள் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிரன் குவித்தனர். 

தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார்.  லிட்டன் தாஸ், கொடுத்த அழகான கேட்சை தவறவிட்டார் சாஹல்.. தற்போது வங்கதேசத்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தும் முயற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

250 ரன்களுக்கு மேல் குவிக்க வங்கதேசமும், அதற்குள் சுருட்ட இந்தியாவும் தீவிரம் காட்டி வருகிறது.  பந்துவீச்சு கைக்கொடுக்கவில்லை என்றால், வழக்கம் போல பேட்ஸ்மேன்கள் தான் அணியை காப்பாற்ற வேண்டும். 

தவான் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படுவாரா?

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கிரிக்கெட்டில்  ஓய்வு அளிக்கப்பட்டுள்ள விராட் கோலி , மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடரில் மோசமாக செயல்பட்ட தவான் அணியிலிருந்த நீக்கப்பட்டு,  பிரித்திவி ஷா அல்லது மாயங் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  நட்சத்திர வீரர் ரஹானேவுக்கு இந்த தொடரில் தேர்வுக்குழுவினர் மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது. புஜாரா, விஹாரி, கருண் நாயர் ஆகியோர் இந்த டெஸ்ட்டில் விளையாட வாய்ப் வழங்கப்படலாம்.

பந்துவீச்சை பொறுத்த வரை பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. டெஸ்ட் அணியில் முதல் முறையாக சாஹலுக்கும் வாய்ப்பு வழங்க தேர்வுக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது கருதப்படுகிறது. 
 
சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா சென்னை?

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 5வது சீசன் நாளை முதல் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் பாதியின் அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.   

தினசரி இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடப்பு சாம்பியனான சென்னை, கொல்கத்தா, பெங்களுரு, கோவா, டெல்லி உள்ளிட்ட 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வெல்லும் என்று பயிற்சியாளர் JOHN GREGORY தெரிவித்துள்ளார். சென்னை அணியில் இந்த சீசனில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டில் இடம்பெற்றிருந்த HENRIQUE SERENO.BIKIRAMIJIT SINGH.RENE MIHELIC ஆகிய வீரர்கள் இம்முறை சென்னை அணியில் இல்லை.

அதற்கு பதிலாக பிரேசில் வீரர் ELI SABIA. ஸ்பெயின் வீரர் ANDREA ORLANDI .பாலஸ்தீன வீரர் CARLOS SALOM ஆகியோர் புதியதாக சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், திறமையான வீரர்கள் சென்னை அணியில் இருப்பதாக பயிற்சியாளர் JOHN GREGORY கூறியுள்ளார்.  தமிழக வீரர் பாண்டியனும் சென்னை அணிக்காக விளையாடுகிறார். 

இந்த சீசனில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் JEJE  பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீசன் தொடங்குவதற்கு முன் மலேசியாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் இது ஐ.எஸ்.எல். தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். சென்னை அணி வரும்  ஞாயிற்றுகிழமை முதல் ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. 

உள்ளூர் போட்டியில் 257 ரன்கள் விளாசி சாதனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டார்சி ஷார்ட் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 257 ரன்கள் விளாச சாதனை படைத்துள்ளார். குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் WESTERN WARRIORS அணிக்காக களமிறங்கிய அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதலில் 83 பந்தில் முதல் சதத்தை விளாசிய டார்சி ஷார்ட், பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார்.  அடுத்த சதத்தை 45 பந்துகளில் பூர்த்தி செய்தார்.  முடிவாக 148 பந்துகளில் 257  ரன்களை ஷார்ட் விளாசினார். இதில் 24 சிக்சர்கள் விளாசி டார்சி ஷார்ட் புதிய உலக சாதனை படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்காட்லாந்து வீரர் ALISTAR BROWN, இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு பின் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை டார்சி ஷார்ட் படைத்தார். நாய் கடித்து சில வாரங்களாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத நிலையில் தற்போது டார்சி ஷார்ட் புதிய சாதனை படைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்