விளையாட்டு திருவிழா - 27.09.2018

ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? - இந்தியா Vs வங்கதேசம் நாளை மோதல்
விளையாட்டு திருவிழா - 27.09.2018
x
ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? - இந்தியா Vs வங்கதேசம் நாளை மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் இந்தியாவும், வங்கேதேசமும் மோதுகின்றன.  துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. மேலும், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கடந்த 11 போட்டிகளில் தோல்வியே அடையவில்லை.

வங்கதேச அணியில் தமீம் இக்பால், ஷகிபுல் ஹசன் ஆகியோர் இல்லாதது பாதகமாகவே கருதப்படுகிறது. எனினும் ரஹிம், முகமதுல்லா, மித்துன் உள்ளிட்ட வீரர்கள் நல்ல பார்மில் உள்ளது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது.

கடந்த சில போட்டிகளாக சொதப்பி வந்த வேகபந்துவீச்சாளர் ரஹ்மான் , பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசியது, வங்கதேசத்துக்கு நிம்மதியை அளித்துள்ளது.  இதே போன்று வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் மெஹதிஹயம் ரன்களை கட்டுப்படுத் நெருக்கடியை அளிக்கிறார். 

வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட்டு விளையாடினால் அது நிச்சயம் இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான செய்த தவறை இந்தியா திருத்திக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது.  ஆசிய கோப்பையை 7வது முறையாக வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. வங்கதேசமும் இந்தியாவும் 34 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 28 முறையும், வங்கதேசம் 5 முறையும் வென்றுள்ளன. 

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிச் சுற்றுக்கு யாருமே எதிர்பாராத வகையில் வங்கதேசம் அணி தகுதி பெற்றது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் அணியில் அமீருக்கு பதிலாக ஜூனைத் கான் இடம்பெற்றார். 

பாகிஸ்தான் அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து மூழ்கி கொண்டிருந்த கப்பலை காப்பாற்றும் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டார் ரஹிம். ரஹிமுடன் ஜோடி சேர்ந்த மித்துன் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.  ரஹிம் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மித்துன் 60 ரன்களில் வெளியேற, வங்கதேச அணி 239 ரன்களை எட்டியது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர் ஷமான் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம், சர்ஃபிராஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர், இமார் உல் ஹக் மட்டும் நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க, சிறப்பாக விளையாடிய ஷாயிப் மாலிக் 30 ரன்கள் எடுத்த போது மோர்ட்டசாவின் அபாரமான கேட்சால் ஆட்டமிழந்தார். ஆசிஃப் அலி 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.  தனி ஆளாக நின்று போராடிய இமாம் உல் ஹக், 83 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  இதனால் பாகிஸ்தான் அணி 202 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.  வங்கதேச வீரர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷகிபுல் ஹசன், தமீம் இக்பால் இல்லாமலே பாகிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தியது, அந்நாட்டு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது. அதே வேலையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆசிய கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்