விளையாட்டு திருவிழா - 25.09.2018

கேப்டனாக மீண்டும் தோனி- ரசிகர்கள் மகிழ்ச்சி
விளையாட்டு திருவிழா - 25.09.2018
x
இந்தியாவின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது கடைசி  ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடி வருகிறது.இறுதிச் சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.இதனால் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். இது தோனி தலைமை தாங்கும் 200 வது ஒருநாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் அறிமுக வீரராக தீபக் சாஹர் களம் காணுகிறார். கலில் அகமது, சித்தார்த் கவுல், மணிஷ் பாண்டே , கே.எல். ராகுல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, அணியில் நிரந்தர இடம் பிடிக்க இளம் வீரர்கள் போராடுவார்கள்.இருப்பினும் நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்தியாவை வீழ்த்தும் உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. 

நிழல் கேப்டனாக வலம் வரும் தோனி

தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ மிக்க வீரர் தோனி மட்டுமே.. தோனி அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழும் போது எல்லாம் தக்க பதிலடி தருவது தோனியின் ஸ்டைல்..இந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கேப்டனாக இருந்தாலும், அவர்களுக்கு மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணனை போல் ஆலோசனை வழங்குவது தோனி தான்..கேப்டனாக கோலி, ரோஹித் ஆகியோருக்கு அனுபவமில்லாத நிலையில் அவர்களுக்கு தோனி பக்க பலமாக இருக்கிறார்..எதிரணி வீரர்களின் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது, ரன் குவிப்பை எப்படி கட்டுப்படுத்துவது, FIELDING-ஐ எப்படி சரி செய்வது, மேலும் எந்த வகையில் பந்துவீச வேண்டும் என அறிவுரை வழங்குவது என தோனியின் பங்கு நிகரில்லாதது.மேலும், தனது அனுபவம் மூலமாக நடுவர் தவறான முடிவு அளித்தால், அதனை தெரிந்து கொண்டு டி.ஆர்.எஸ். முடிவை பயன்படுத்த கேப்டன்களை தோனி அறிவுறுத்துவது என நிழல் கேப்டனாகவே செயல்படுகிறார் தோனி..இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம், கொஞ்சமும் ஈகோ இல்லாமல் தோனி செய்வதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் வளர்த்து கொண்டது தான். பேட்டிங், விக்கெட் கிப்பிங், மற்றும் கேப்டனுக்குஆலோசகராக விளங்கும் தோனி, ஓய்வு பெற்றால் அது நிச்சயம் இந்திய அணிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறிவிடும். 

 



Next Story

மேலும் செய்திகள்