விளையாட்டு திருவிழா - 19.09.2018 - இந்திய ரசிகர்களை மிரள வைத்த ஹாங்காங்...

ஹாங்காங் அணிக்கு குவியும் பாராட்டுக்கள் - தவான் சதம்... தோனி டக் அவுட்...
விளையாட்டு திருவிழா - 19.09.2018 - இந்திய ரசிகர்களை மிரள வைத்த ஹாங்காங்...
x
* கலீல் அகமது..  ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி இந்தியாவுக்க வெற்றியை தேடி தந்தவர்.. 1997 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் டோங் நகரில் பிறந்தவர் 

* கலீல் அகமது சிறு வயதில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்தவர். வேகப்பந்துவீச்சு மீது காதல் கொண்ட கலீல், சிறு வயதிலே வேகப்பந்துவீச்சை தான் ஆர்வத்துடன் வீசுவாராம்.

* கலீல் தனது திறமையை வளர்த்து கொள்ள, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் பட்டை தீட்டப்பட்ட கலீல், அந்த தொடரில் ஜொலித்தார். 

பின்னர்,  ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக கலீல் தேர்வு செய்யப்பட்டார்.  அதில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கானின் கண்காணிப்பில் இருந்த கலீல் அவரிடம் பந்துவீச்சு நுணக்கங்களை கற்றுக் கொண்டார்.

* பின்னர், இந்திய ஏ அணியில் இடம்பெற்ற கலீல், ஆஸ்திரேலியா ஏ, தென்னாப்பிரிக்கா ஏ அணியில் இடம்பெற்று, விக்கெட்டுகளை வீழ்த்து ஜொலித்தார்.

* இதனால் கலீல் அகமதுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது. துபாய்க்க செல்வதற்கு முன், தனது முதல் பயிற்சியாளருக்கு LED TV ஐ வாங்கி கொடுத்துள்ளார் கலீல். அந்த டி.வி.யில் தான் பயிற்சியாளர் , கலீல் விளையாடிய முதல் போட்டியை கண்டுள்ளார். 

இந்தியா Vs பாகிஸ்தான் பலப்பரீட்சை

* கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 

* கத்துக்குட்டி ஹாங்காங்கை 116 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி சுருட்டியது. ஆனால் அதே ஹாங்காங் அணி இந்தியாவிடம் 259 ரன்கள் குவித்தது. இதனால் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு பலமாக இருப்பதை உணர முடிகிறது.

* அதே வேளையில் இந்திய அணியும் ஓய்வின்றி அடுத்த நாளே போட்டியில் பங்கேற்கின்றனர். பாகிஸ்தான் அணியோ 2 நாள் ஓய்விற்கு பிறகு இந்திய அணியை எதிகொள்கிறது.

* ஹாங்காங் அணிக்கு எதிராக இந்தியா நேற்று செய்த தவறை , இன்று திருத்திக்கொண்டு விளையாடினாலே பாகிஸ்தானுக்கு சவால் அளிக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால், இந்திய வீரர்கள் கவனத்துடனே செயல்பட வேண்டும்.

* USMAN. AFRIDI. SHADAB KHAN  உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை இந்திய வீரர்கள் எதிர்கொண்டது இல்லை.. மேலும் துபாயில் பாகிஸ்தான் வீரர்கள் அதிக அளவில் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் தோனியை தவிர நேற்று தான் முதல் போட்டியில் விளையாடியுள்ளனர். 

* இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணி ஆசிய போட்டியில் 12 முறை மோதியுள்ளனர். இதில் இந்தியா 6 போட்டியில் வெற்றியும், பாகிஸ்தான் 5 போட்டியில் வெற்றியும் கண்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்