விளையாட்டு திருவிழா - 13.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

விளையாட்டு திருவிழா - 13.09.2018 - இலங்கையின் டம்புல்லாவில நடந்த ஆட்டம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது
விளையாட்டு திருவிழா - 13.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
x
விளையாட்டு திருவிழா - 13.09.2018

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.  23 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. 6 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் பாகிஸ்தான், ஹாங்காங்குடன் நடப்பு சாம்பியனான இந்தியா இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், SUPER 4 என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும் இந்தச் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 18ஆம் தேதி ஹாங்காங்குடன் மோதுகிறது. ஓய்வு ஏதுமின்றி  அடுத்த நாளே பெரிதும் எதிர்பார்க்கப்படும், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இதுவரை ஆசிய கோப்பை தொடர் 13 முறை நடந்துள்ளது. அதில் இந்தியா 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆசிய போட்டியில் அதிக ரன் விளாசியவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இலங்கை வீரர் ஜெயசூரியா, அதிக விக்கெட் டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். ஆசிய போட்டியில் இந்தியா இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 31 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது. 

இலங்கையின் டம்புல்லாவில நடந்த ஆட்டம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது
லீக் சுற்றில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் 267 ரன்கள் எடுத்தது. 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறஙகிய சேவாக் 32 பந்து பிடித்து 10 ரன் மட்டும் தான் எடுத்தாரு. ஒன் டவுன்ல களமிறங்கின கோலியும் விக்கெட்டை விழாம பாத்துக்கு டிரை பண்ணாரு. ஆனால், 27 பந்தில் 18 ரன் எடுத்திருக்கும் போது சையிது அஜ்மல் பந்துவீச்சில போல்ட் ஆனாரு. ஒரு கட்டத்தில் விக்கெட் வீழ்ந்தாலும் கம்பீர், தோனி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்து இந்தியாவை வெற்றிக்கு பக்கத்துக்கு அழைச்சிட்டு சென்றாங்க..கம்பீர் 83 ரன்களில் வெளியேறினார். அப்போ ரோகித் சர்மா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தான் இருந்தாரு. ரோஹித் 22 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் தோனி 56 ரன்களில் வெளியேறினார். இதனால் பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பும் அதிகமா இருந்தது.  அப்போ சூரேஷ் ரெய்னா அதிரிடியாக விளையாடி 34 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில், ஹர்பஜன் சிங்கிற்கும், பாகிஸ்தான் வீரர் சாயிப் அக்தருக்கும் வோய் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில ஹர்பஜன் சிங் கடைசியில ஒரு சிக்ஸ் அடிக்க இந்திய அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

விராட் கோலி வெற்றியின் ரகசியம் என்ன?
உடலை மெருகேற்றும் கோலியின் உணவு பழக்கம், கோலி அருந்தும் தண்ணீரின் ஒரு பாட்டிலின் விலை ரூ.950

கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதியே சாதனை  படைக்க உறுதுணையாக இருக்கும்.  அந்த வகையில், சர்வதேச ஒருநாள் போட்டியில் 30 வது சதத்தை பூர்த்தி செய்துள்ள விராட் கோலி, உடல் தகுதிக்காக கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்  பல்வேறு சாதனைகளை தமது இளம் வயதிலேயே நிகழ்த்தியுள்ளார். விளையாட்டு வீரராக ஜொலிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான உணவு பழக்கமும், கடும் பயிற்சியும் முக்கியம் என்பது விராட் கோலியின் கருத்து. சிறு வயதில் கொழு கொழு சிறுவனாக இருந்த விராட் கோலி, கிரிக்கெட்டில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது உடல் தகுதி மிகவும் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டார். முதலில் நொறுக்கு திணிகளுக்கு தமக்கு தாமே தடை போட்டு கொண்ட விராட் கோலி, எண்ணெயால் சமைக்கப்பட்ட பொருட்களை  முற்றிலும் தவிர்த்து கொண்டார். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை வெகுவாக குறைத்து கொண்ட அவர், புரத சத்துக்கள் உடைய உணவு பொருட்களையும், வெக வைத்த காய்கறிகளை அதிகம் எடுத்து கொண்டார். LAMB CHOPS எனப்படும் ஆட்டுக்கறி உணவு, சாலமன் மீன் விராட் கோலியின் உணவில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். BLACK COFFEE மட்டுமே விரும்பும் விராட் கோலி, DRIED FRUITS வகைகளை தினமும் காலையில் உட்கொள்வார். விராட் கோலி மினரல் வாட்டரை மட்டுமே அருந்துவாராம். அது நமது ஊர் கடைகளில் விற்கும் மினரல் வாட்டர் அல்ல. பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மினரல் வாட்டர். அதன் ஒரு லீட்டரின் விலை 950 ரூபாய் மூன்று வேலை சாப்பிடுவது போல், உடற்பயிற்சி மேற்கொள்வதை  விரட் கோலி என்றுமே தவறியது இல்லை. வாரத்திற்கு 5 நாள் ஜிம்மில் பயிற்சியில் ஈடுபடும் கோலி, காயங்களை தவிர்க்க 2 நாள் விடுப்பு எடுத்துக் கொள்வாராம். TRED MILL, CYCLING, WEIGHT LIFTING ஆகிய பயிற்சிகளில் மட்டுமே கோலி கவனம் செலுத்துவாராம். கடின உழைப்பு இல்லை என்றால் விரும்பிய வாழ்க்கை கிடைக்காது என்பது கோலியின் தாரக மந்திரம். நினைத்ததை முடிக்க ஆரோக்கியமான உடல் மிகவும் முக்கியம் என்பதே கோலி அவரது ரசிகர்களுக்கு அளிக்கும் அறிவுரை.



Next Story

மேலும் செய்திகள்