2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
பதிவு : நவம்பர் 19, 2021, 08:11 PM
மாற்றம் : நவம்பர் 19, 2021, 08:16 PM
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - மலை மீது ஏற்றப்பட்டது மகா தீபம்
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - மலை மீது ஏற்றப்பட்டது மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் மகா தீபா நிகழ்வை ஒட்டி, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. செப்பினால் செய்யப்பட்ட, 175 கிலோ எடை கொண்ட தீப கொப்பரை, 2 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தீப கொப்பரையில், 7 ஆயிரத்து 150 கிலோ நெய், 22 கிலோ கற்பூரம், ஆயிரத்து 200 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலை மீது ஏற்றப்படும் நிலையில், அப்போது சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று சுவாமிக்கு வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்வில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

பிற நிகழ்ச்சிகள்

2022 புத்தாண்டு பலன்கள் - ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு

2022 புத்தாண்டு பலன்கள் - ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு

29 views

புத்தாண்டு பலன்கள் 2022 | New Year 2022 | Astrologer Sivalpuri Singaram

புத்தாண்டு பலன்கள் 2022 | New Year 2022 | Astrologer Sivalpuri Singaram

46 views

பரபரப்பாக முடிந்த 2021

2021 நிகழ்வுகள் தொகுப்பு

19 views

ஒமிக்ரானும் தற்காப்பும் : உங்கள் கேள்விகளுக்கு அமைச்சரின் பதில்கள்

ஒமிக்ரானும் தற்காப்பும் : உங்கள் கேள்விகளுக்கு அமைச்சரின் பதில்கள்

19 views

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

32 views

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.