அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம்
பதிவு : அக்டோபர் 08, 2020, 10:03 AM
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்) : கமலா ஹாரிஸ் (ஜனநாயக கட்சி) VS மைக் பென்ஸ் (குடியரசுக் கட்சி)
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்) : கமலா ஹாரிஸ் (ஜனநாயக கட்சி) VS மைக் பென்ஸ் (குடியரசுக் கட்சி)


அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் இது- கமலா ஹாரிஸ் ;
ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை- மைக் பென்ஸ் 


அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் இது என்று பேசிய கமலா ஹாரிஸுக்கு, ஆட்சி மாற்றத்திற்கு இடமே இல்லை என மைக் பென்ஸ் பதிலடி கொடுத்தார். அமெரிக்க தேர்தல் நடைமுறைப்படி குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடும் மைக் பெனஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சியில் அவர்கள் இவ்வாறு பேசினர்.


இனவாதம் பற்றி பேச டிரம்ப் அரசு தயாராக இல்லை-கமலா ஹாரிஸ் ; 
அடிப்படையிலேயே இனவாதம் இருப்பதாக கருதுவது தவறு-மைக்பென்ஸ் 


நேருக்குநேர் விவாதத்தில் பேசிய துணை அதிபர் வேட்பாளர்கள் இருவரும், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணம் அநீதியானது என்றனர்.  தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், இனவாதம் பற்றி பேச டிரம்ப் அரசு தயாராக இல்லை என விமர்சித்தார்.  அமெரிக்காவின் அடிப்படையில் இனவாதம் இருப்பதாக கருதுவது தவறு என்று பென்ஸ் பதிலளித்தார். 


நீதிபதி நியமனத்தில் ஒருவராவது கருப்பினத்தை சேர்ந்தவரா?- கமலா


நேரடி விவாதத்தில், அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ஒருவராவது கருப்பினத்தை சேர்ந்தவரா என கமலா ஹாரிஸ் கேள்வி எழுப்பினார்.  உச்சநீதிமன்ற நீதிபதியாக டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டவர் மிகச்சிறந்தவர் என அதற்கு பென்ஸ் விளக்கம் அளித்தார்.  விதவிதமான முகங்களை கொண்ட அதிபர் டிரம்ப், வாக்குறுதிகளை ஒருபோதும் காப்பாற்றியது இல்லை என கமலாஹாரிஸ் குற்றம்சாட்டினார். 


மீண்டும் டிரம்ப் தான் அதிபர் - மைக் பென்ஸ் நம்பிக்கை 


டிரம்ப் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்துள்ளதால் ஜனநாயக கட்சிக்கு வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கமலா ஹாரிஸ்  நம்பிக்கை தெரிவித்தார். 2016-ஐ போல் 2020ம் ஆண்டு தேர்தலிலும் டிரம்புக்கே மக்கள் வெற்றியை தருவார்கள் என பென்ஸ் கூறினார்.  இதனை மறுத்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் இது என்றார்.  ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, மீண்டும் டிரம்ப் தான் அதிபர் என மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

பிற நிகழ்ச்சிகள்

உங்கள் வங்கிக் கணக்கு முடக்கம் - SMS எச்சரிக்கை

உங்கள் வங்கிக் கணக்கு முடக்கம் - SMS எச்சரிக்கை

12 views

FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Full Interview

FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Full Interview

622 views

(19/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 03

(19/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 03

310 views

(18/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 02

(18/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 02

388 views

(17/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Part 1

(17/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 1 | Thanthi TV

987 views

இன்று உலக காகித பை தினம்... காகித பைகளை தயாரிக்கும் ஊட்டி மக்கள்

உலக காகித பை தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ள காகித பை பற்றி சிறப்பு தொகுப்பு..

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.