(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை
பதிவு : ஆகஸ்ட் 05, 2020, 03:52 PM
மாற்றம் : ஆகஸ்ட் 05, 2020, 06:46 PM
(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை
(05/08/2020) ராமர் கோவில் பிரம்மாண்ட பூமி பூஜை 

* ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில், கோவில் கட்டும் பணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 


* அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள், நடைபெற்று வந்தன. 


* இந்நிலையில், ராமர்கோவில், கட்டுவற்கான பூமி பூஜையில்,  பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து லக்னோ புறப்பட்டு, அங்கிருந்து,  ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார். அவரை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர்.
* கார் மூலம், அனுமன் கர்ஹி கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனுமனுக்கு தீபாராதனை காட்டி பிரதமர் வழிபாடு நடத்தினார். 


* அனுமன் கோவிலில் வழிப்பட்ட பிறகு, குழந்தை வடிவில் ராமர் இருக்கும், ராம் லல்லா கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார்.  ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமரை வணங்கியதோடு, தீபாராதனை காட்டினார்...   


* பின்னர், நடத்தப்பட்ட பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி,   வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோவில் கட்டுவதற்கான கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி விழுந்து வணங்கினார். 


* பின்னர் விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். இதனையடுத்து, 
அயோத்தி, ராமர் கோவில் கட்டுமானத்திற்கான, அடிக்கல் நாட்டு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி மந்திர் எனும், சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். ரா​மர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மஹாந்த் நித்ய கோபால் தாஸ் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 


* இவ்விழாவின் போது கோதண்ட ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடிக்கு, உத்தர பிரதேச முதமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசாக வழங்கினார் .


* ராமர் கோவில், அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


* நரேந்திர மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறை.


* ராமர் கோவிலுக்கான பூமி பூஜையால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

பிற நிகழ்ச்சிகள்

(07/02/21)"ஊழலுக்கு தனி நீதிமன்றம்"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்

(07/02/21)"ஊழலுக்கு தனி நீதிமன்றம்"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்

20 views

(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்

(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்

14 views

அருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி

அருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி

24 views

மலை ரயிலில் ஒரு பயணம்

மலை ரயிலில் ஒரு பயணம்

53 views

பாலமேடு ஜல்லிக்கட்டு 2021 | Visuals of Palamedu Jallikattu 2021 | Thanthi TV

பாலமேடு ஜல்லிக்கட்டு 2021 | Visuals of Palamedu Jallikattu 2021 | Thanthi TV

55 views

வாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu

வாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu

128 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.