மீண்டும் பதவியை தட்டிப் பறித்த...பாகிஸ்தான்அதிபர் ஆசிப் அலி சர்தாரி...

x

பாகிஸ்தானின் அதிபராக இரண்டாவது முறையாக ஆசிப் அலி சர்தாரி பதவியெற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடந்து ஒரு மாத‌த்திற்குப் பிறகே, கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைந்த‌து. புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, அதிபராக இருந்த ஆசில் அலி சர்தாரியின் பதவிக்காலம் முடிவடைந்த‌தால், அதிபர் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சர்தாரி 411 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இஸ்லாமாபாத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, ஆசிப் அலி சர்தாரிக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி பேஸ் இசா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்