பாக். அணிக்கு மீண்டும் திரும்பிய அதிரடி பௌலர்

x

பாக். அணிக்கு மீண்டும் திரும்பிய அதிரடி பௌலர்

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி விளையாடுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் ஷாகீன் அஃப்ரிடி சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், 17ம் தேதி பாகிஸ்தான் பங்கேற்கும் பயிற்சி ஆட்டத்திற்கு ஷாகீன் அஃப்ரிடியின் பெயரையும் பரிசீலிக்கலாம் என அந்நாடு கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

காயத்தில் இருந்து ஷாகீன் அஃப்ரிடி குணமடைந்துள்ள நிலையில், வருகிற 15ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் அவர் இணைய உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்