"பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது" - பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்

x

இந்தியா நிலவுக்கு செல்கிறது, ஆனால் பாகிஸ்தானோ, நாடு நாடாக பிச்சை எடுக்கிறது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 333 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலைவாசி உயர்வு மக்களை வாட்டுகிறது. இந்த சூழலில் 2019 ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், லண்டனில் இருந்தவாறு கட்சி தொண்டர்களிடம் வீடியோ வாயிலாக பேசினார். அப்போது, இந்தியா நிலவுக்கு செல்கிறது, ஜி-20 மாநாட்டை நடத்துகிறது, ஆனால், பாகிஸ்தான் பிரதமர் நாடு நாடாக சென்று நிதி கேட்டு பிச்சை எடுக்கிறார் என நவாஸ் செரீப் ஆதங்கப்பட்டார். பாகிஸ்தான் இந்த நிலைக்கு யார் காரணம் என கேள்வியை எழுப்பிய நவாஸ் செரீப், தனக்கு எதிரான வழக்குகளில் நீதிபதிகள், முன்னாள் ராணுவ ஜெனரல், உளவுத்துறை அதிகாரிகள் செய்தது கொலை குற்றத்தைவிட கடுமையான குற்றம், அவர்கள்தான் இந்த நிலைக்கு காரணம் என குற்றம் சாட்டினார். லண்டனிலிருக்கும் நவாஸ் செரீப் வழக்குகளில் அவரது கட்சி ஜாமின் பெற்றுவிட்டதால், அவர் வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு திரும்புகிறார் என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்