மண்ணில் உருண்ட பெருந்தலை.. முடிவுக்கு வரும் போர்?
மண்ணில் உருண்ட பெருந்தலை.. முடிவுக்கு வரும் போர்?
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். காசா பகுதியில் போரை தூண்டிய தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நிலையில் மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார். காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அங்குள்ள பணயகைதிகள் இஸ்ரேல் திரும்புவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் கேட்டு கொண்டார். இதனிடையே காசா பதுங்குமிடத்தில் இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை குண்டு வீசி கொல்லும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.