கணவருக்கு நீண்ட ஆயுளுடன் வாழ விரதம்.! `கர்வா சவுத்' கொண்டாடிய பெண்கள்

x

ஊழியர்கள் அலட்சியம்..! மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன்..! தருமபுரியில் அதிர்ச்சி


தருமபுரி மாவட்டத்தில் அலட்சியமாக விடப்பட்டிருந்த மின் வயரால், 3 வயது சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி கிராமத்தில் அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மோட்டார் நீண்ட காலமாக பழுதாகி இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் மோட்டரை ஊழியர்கள் கழற்றி சென்றுள்ளனர். ஆனால், மோட்டாருக்கான மின் வயர்கள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்துள்ளது. அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், இந்த மின் வயரை தொட்டதில், தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானான். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்