அதிர வைத்த குழந்தைகள் விவகாரம் -பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க்... அதிர்ந்த செனட்; திக் திக் பின்னணி

x

அமெரிக்க செனட் சபையில் சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்...

Big Tech மற்றும் ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் என்ற தலைப்பின் கீழ் விசாரணை நடைபெற்ற நிலையில், இதுகுறித்து எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களான Meta, X, TikTok, Snap மற்றும் Discord ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டனர். இளம் பயனாளர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், சைபர் bullying, சமூக ஊடக துஷ்பிரயோகங்கள் ஆகியன குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் கேள்விகள் கேட்கப்பட்டன... அப்போது செனட் நீதித்துறைக் குழு விசாரணையில், குடியரசுக் கட்சி எம்.பி லிண்ட்சே கிரஹாம், உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது என மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஜுக்கர்பெர்க்கிடம் நேரடியாக சாடினார்... இதையடுத்து ஜூக்கர்பெர்க், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கோரினார்... ஆப்பிள் மற்றும் கூகுள் பயனர்களின் வயதை சரிபார்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். சமூக வலை தளங்களின் உள்ளடக்க அளவீடுகளுக்கு அனுமதி அளிக்கும் 230வது சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை லிண்ட்சே கிரஹாம் வலியுறுத்தவே, அங்கு கைதட்டல்கள் எழுந்தன. பொருத்தமற்ற உள்ளடக்கத்தை மறைத்தல், தேடல் காலக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்தது...


Next Story

மேலும் செய்திகள்