வெட்டுக்கிளியில் தயாராகும் வேற லெவல் ஜூஸ்... ஜப்பான் காரங்க செய்த தரமான வேலை...

x

லெமன் ஜூஸ்ல ஆரம்பிச்சு... காஸ்ட்லியான டிராகன் ஜூஸ் வரைக்கும்... ஏகப்பட்ட ஜீஸ்களை குடிச்சு ருசிச்சுருப்போம்... ஆனா நம்ம வாழ்நாள்ல இனிமேல் ஜூஸ பத்தியே நெனச்சே பாக்க கூடாதுங்குற அளவுக்கு... நம்ம ஜப்பான் காரங்க ஒரு தரமான வேலைய பாத்து வச்சுட்டாங்க...

ஜப்பான் நாட்டுல இருக்க டோக்கியோ நகரத்துலTake-Noko அப்டிங்குற... ஒரு ஜூஸ் ஷாப் இந்த ஊர் மக்கள் மத்தில ரொம்பவே பிரபலமாகிட்டு வருது... பொதுவா ஒரு ஜூஸ் கடை பேமஸ் ஆகுதுனா... கண்டிப்பா அந்த கடைல டேஸ்ட் நல்லாருங்குற ஒரே ரீசன்னா தான் இருக்கும்... பட் இந்த ஜூஸ் கொஞ்சம் டிஃப்ரென்ட்னே சொல்லலாம்... அப்டி என்னாங்க டிஃப்ரென்ட்னு பாத்தா... ஜூஸ்ல ஐஸ் க்ரீம், பாதாம், பிஸ்த்தாவலாம் தூவி சாப்டாம... பறந்து திரிஞ்ச வெட்டுக்கிளிய புடிச்சு... ஜூஸ்ல போட்டு கலந்துகட்டி சாப்டுட்டு இருக்காங்க...

என்னையா... பழைய சாப்பாட்டுக்கு பச்ச மிளகாய கடிச்சு திங்குற மாதிரி இப்படி திங்குறீங்க... ஏன் இப்படினு... கடை ஓனர்கிட்டா விசாரிச்சா... உலக மக்கள் தொகை அதிகமாகிட்டு வரதுனால...2050-ல கண்டிப்பா உணவு தட்டுப்பாடு உருவாகுமாம்... அதுனால அண்ணைக்கு எல்லாரும் பூச்சிகளை சாப்பிட வேண்டிய நிலமை உருவாகுங்குறதுனால... இப்போ இருந்தே என்னோட பிஸினஸ்ஸ டெவலப் பண்ண வெட்டுக்கிளி ஜூஸ் போட ஆரம்பிச்சுட்டேன்னு சொல்லூறாங்க இந்த ஓனரம்மா...

அடேங்கப்பா பெரிய வியாபார காந்தமா இருப்பாங்க போல...


Next Story

மேலும் செய்திகள்