இத்தாலி ஃபார்முலா-ஒன் கார் பந்தயம் - மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி!

இமொலா நகரில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள், போட்டி போட்டுக்கொண்டு மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இத்தாலி ஃபார்முலா-ஒன் கார் பந்தயம் - மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி!
x
இத்தாலி ஃபார்முலா-ஒன் கார் பந்தயம் - மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி!

இத்தாலியில் நடைபெற்ற ஃபார்முலா-ஒன் கார் பந்தயப் போட்டியில் ரெட் புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

இமொலா நகரில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள், போட்டி போட்டுக்கொண்டு மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்தனர். இறுதியாக பந்தய தூரத்தை சுமார் 1 மணி நேரம் 32 நிமிடங்களில் கடந்து, ரெட் புல் அணி வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி பெற்றார். மற்றொரு ரெட் புல் அணி வீரர் செர்ஜியோ 2ம் இடத்தையும், மெக்லாரன் அணி வீரர் நோரிஸ் 3ம் இடத்தையும் பிடித்தனர். பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக, இத்தாலி தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில், வானில் வண்ணப் பொடிகளைத் தூவி விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்