இந்தோனேசியா விதித்த தடை... இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
x
பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 4 லட்சம் டன் பாமாயில் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு வரும் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பாமாயில் உற்பத்தி குறைவு, தென்கிழக்காசிய நாடுகளில் பாமாயில் விலை அதிகரிப்பால், இந்தோனேசிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாமாயில் இறக்குமதிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்