"ராஜபக்சர்கள் நாட்டை அழித்துவிட்டனர்" எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

இலங்கையின் இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டியாவில், அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மிகப்பெரிய கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
x
"ராஜபக்சர்கள் நாட்டை அழித்துவிட்டனர்" எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

இலங்கையின் இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டியாவில், அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மிகப்பெரிய கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே போன்று வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், உருவப் பொம்மைகளையும் எரித்தனர். மேலும், பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இரண்டரை ஆண்டுகளாக ராஜபக்சர்கள் நாட்டை குட்டிச் சுவாராக்கி அழித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். பொய் இறக்கைகளை அணிவிக்க அவர்கள் மீண்டும் முயற்சிப்பதாகவும், ஆனால், அவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்