"கோத்தபய அரசே பதவி விலகு"... 15வது நாளாக ஒலிக்கும் மக்கள் குரல்

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து கொழும்பின் காலி முகத்திடலுக்கு வந்த பொதுமக்கள் அந்நாட்டு கோத்தபய ராஜபக்ச, மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக போராட்டம்..
x
"கோத்தபய அரசே பதவி விலகு"... 15வது நாளாக ஒலிக்கும் மக்கள் குரல்

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து கொழும்பின் காலி முகத்திடலுக்கு வந்த பொதுமக்கள் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச, மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இன்றைய தினமும் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெக்கப்படவுள்ள நிலையில், "சுதந்திரப் போராட்டத்தின் அணிவகுப்பு" என்ற பெயரில் இலங்கை அரசு பதவி விலகக் கோரி வரும் 26ம் தேதி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாத யாத்திரை நடத்த ஐக்கிய சக்தி முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சலுகை விலையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 145 ரூபாய்க்கும், சம்பா 175 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளன.

இதனிடையே பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவை பதவி விலகிய பிறகுதான் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்பி டலஸ் அழகப்பெரும் இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்