போரிஸ் ஜான்சன் - பிரதமர் மோடி சந்திப்பின் நோக்கம் என்ன ?

தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது.
x
தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த சந்திப்பில் உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் பிரிட்டன் வணிகத்துக்கான வர்த்தக தடைகளை குறைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து 1 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான புதிய முதலீடுகள் மற்றும் சாப்ட்வேர் முதல் சுகாதாரத்துறை வரையிலான பல்வேறு ஏற்றுமதி ஒப்பந்தங்களை உறுதி செய்ய உள்ள நிலையில், இதன் மூலம் பிரிட்டன் முழுவதும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் பஸ் ஆர்டி மற்றும் சென்னையில் ஆசிய பசிபிக் தலைமையகம் திறக்கப்படும் என்றும் இதன் மூலம் ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முன்னனி நிறுவனமான பாரத் போர்ஜ், தெவ்வா மோட்டார்ஸ் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் 500 புதிய வேலைகளை உருவாக்க உள்ள நிலையில், இந்திய மென்பொருள் நிறுவனமான மாஸ்டெக் அடுத்த மூன்று ஆண்டுகளில் பிரிட்டன் முழுவதும் 79 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதால் சுமார் ஆயிரத்து 600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்