கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த புதிய ஏவுகணை - உலகத்தை அலற விடும் ரஷ்யா..!

208 டன் எடையும், 35 மீட்டர் நீளமும் கொண்ட ஆர்.எஸ் - 28 சர்மட் ஏவுகணை, 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
x
கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த புதிய ஏவுகணை - உலகத்தை அலற விடும் ரஷ்யா..!

உக்ரைன் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், சக்தி வாய்ந்த, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா சோதனை செய்துள்ளது அதரிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10க்கும் அதிகமான அணு குண்டுகளை ஏந்தி சென்று, பல்வேறு இலக்குகள் மீது ஏககாலத்தில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட, சர்மட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது. 208 டன் எடையும், 35 மீட்டர் நீளமும் கொண்ட ஆர்.எஸ் - 28 சர்மட் ஏவுகணை, 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. வட மேற்கு ரஷ்யாவின் ப்ளெஸ்ட்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 6,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்ச்சட்கா தீபகற்பத்தில் உள்ள இலக்கை சென்றடைந்தது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் போர் திறனை வெகுவாக அதிகரித்து, ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்