உக்ரைன் அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

உக்ரைனின் மரியுபோல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
x
உக்ரைன் அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

உக்ரைனின் மரியுபோல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். மரியுபோலை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தீவிர நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இது குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, "மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளை" ரஷ்யா தடுப்பதாகவும், "ரஷ்யா முழுமையான தீமையின் ஆதாரம்" என்றும் குற்றம் சாட்டினார். ரஷ்யா இறுதி எச்சரிக்கை விடுத்தும் உக்ரைனிய ராணுவ வீரர்கள் சரணடைய மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்