பெண் செய்தி வாசிப்பாளருக்கு கிம் கொடுத்த ஆச்சரிய பரிசு - இது தான் காரணமா?
உலகின் மர்மதேசமாக கருதப்படும் வடகொரியாவின் ஆஸ்தான செய்தி வாசிப்பாளரை இன்று உலகம் முழுவதும் பேசுப்பொருளாக்கியிருக்கிறார் அதிபர் கிம் ஜாங்-உன்..

அச்சமானவர் என உலகமே பார்க்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சிரிக்க, அவரது கையை பிடித்துக்கொண்டு சிரித்தவாறு அவருக்கு பின்னால் செல்பவர்தான் வடகொரியாவின் செய்தி வாசிப்பாளர் ரி சுன் ஹி.
இவரை வடகொரியாவின்... இல்லை, இல்லை உலகின் மிகப்பிரபலமான செய்திவாசிப்பாளர் என்றே சொல்லலாம்...
கொரியன் சென்ட்ரல் தொலைக்காட்சியில் பணியாற்றும் ரி சுன் ஹியில் குரலில்தான், தினசரி பெரும்பாலான வடகொரிய மக்கள் அன்றாட செய்திகளை கேட்டாகவேண்டும்...
அவர்கள் மட்டுமா? வட கொரியாவின் அணுசக்தி, ராக்கெட் சோதனைகள், மேற்கு நாடுகளின் தீமைகள் பற்றிய எச்சரிக்கை வரையில் இவரது குரலில்தான் வடகொரிய செய்தியை உலக நாடுகளும் தெரிந்தாக வேண்டும்.

எப்போதும் பிங்க் நிற உடையில் செய்தி வாசிக்கும் ரி சுன் ஹி வடகொரியாவின் பிங்க் லேடி என்றே அழைக்கப்படுகிறார். 1970 களில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கிய ரி சுன் ஹி, வடகொரியாவின் வரலாற்றுப்பூர்வமான பல நிகழ்வுகளை செய்திகளாக வழங்கியிருக்கிறார்.
52 ஆண்டுகளாக செய்தி வாசிக்கும் இவர், வடகொரியாவின் ஆஸ்தான செய்தி வாசிப்பாளர் மட்டுமல்ல, அதிபர் கிம் ஜாங்-உன்னிற்கு பிடித்தமான செய்தி வாசிப்பாளாரும் கூட...
இப்போது வடகொரியாவில் அதிபர் கிம் புதிதாக சொகுசு பங்களாக்களை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
அதில் ரி சுன் ஹிக்கும் அவரது சேவையை பாராட்டி ஒரு அழகான வீட்டை பரிசாக வழங்கியிருக்கிறார் கிம் . அவரை அழைத்து சென்று, வீட்டை சுற்றிக்காட்டியிருக்கிறார் அதிபர் கிம்.
அதிபரின் இந்த ஆச்சரியமூட்டும் பரிசால் அசந்து போயிருக்கும் ரி சுன் ஹி, வழக்கமான முகபாவனை வாயிலாக தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கிடையே கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும், வட கொரியாவின் நிறுவன தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் வடகொரியா வாணவேடிக்கையுடன் மின்னொளியில் ஜொலித்தது.
Next Story