புதின் நண்பரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பரை கைது செய்த போது உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் அவரைத் தாக்கியதாக, புதின் நண்பரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
x
புதின் நண்பரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பரை கைது செய்த போது உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் அவரைத் தாக்கியதாக, புதின் நண்பரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கட்சியின் தலைவரும் புதினின் நெருங்கிய நண்பருமான விக்டர் மெட்வெட்ச்சுக்கை உக்ரைன் படைகள் கைது செய்தன. இந்நிலையில், மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற புதினின் மிக நெருங்கிய நண்பரான விக்டர் மெட்வெட்சுக்கின் மனைவி ஒக்சானா மர்ச்சென்கோ, "உக்ரைன் அதிகாரிகள் தனது கணவரைக் கைது செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாகக்" குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்