"திராணியில்லாத ரஷ்யா" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசம்!

கிராமடோர்ஸ்க் நகரில் ரயில் நிலையத்தை குறிவைத்து 2 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் 10 சிறுவர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் டொனக்ஸ் பிராந்திய ஆளுநர் கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
x
உக்ரைனில் ரயில் நிலையம் மீது ஏவுகணை வீசப்பட்டதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிராமடோர்ஸ்க் நகரில் ரயில் நிலையத்தை குறிவைத்து 2 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் 10 சிறுவர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் டொனக்ஸ் பிராந்திய ஆளுநர் கைரிலென்கோ தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, போர்க்களத்தில் தங்களை எதிர்த்து நிற்க வலிமையும், தைரியமும் இல்லாத ரஷ்யா, பொதுமக்களை குறிவைத்து தாக்குகிறது என விமர்சித்துள்ளார். வரம்பின்றி தீங்கிழைக்கும் ரஷ்யாவை தண்டிக்கவில்லை என்றால், இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் நிற்காது எனவும் செலன்ஸ்கி கூறி உள்ளார். ரயில் நிலைய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்