"ரஷ்யா நிகழ்த்திய பயங்கரம்" - உக்ரைன் அதிபரின் அதிர்ச்சி தகவல்!

உக்ரைனில் புச்சாவை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
x
"ரஷ்யா நிகழ்த்திய பயங்கரம்" - உக்ரைன் அதிபரின் அதிர்ச்சி தகவல்

உக்ரைனில் புச்சாவை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். புச்சா நகரில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதகாவும், அதிலும் 50க்கும் மேற்பட்டோர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது. இதை ரஷ்யா முற்றிலும் மறுத்திருந்த நிலையில், போரோடியங்காவில் ரஷ்ய தாக்குதல்களால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்