"இலங்கையில் அரபு எழுச்சிக்கு முயற்சி" - கோத்தபய ராஜபக்சே அலுவலகம் குற்றச்சாட்டு

இலங்கையில் அரபு எழுச்சியை நிகழ்த்த முயற்சி செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
x
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், அரசு மீது கோபம் கொண்டிருக்கும் மக்கள் வியாழக்கிழமை இரவு அதிபர் மாளிகை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இதுபோன்ற போராட்டங்களை தடுக்கும் வகையில் கொழும்புவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்திருக்கும்  கோத்தபய ராஜபக்சே அரசு, திங்கள் கிழமை காலை வரையில் ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே அலுவலகம், மத்தியக் கிழக்கு நாடுகளில் நடந்த அரபு எழுச்சியை இலங்கையில் நடத்த முயற்சி செய்யப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அரபு எழுச்சி என்பது கடந்த 2010 - 2012-களில் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டங்களை குறிப்பதாகும்.  


Next Story

மேலும் செய்திகள்