"ரஷ்யா புதிய தாக்குதல்களை நடத்த திட்டம்" - உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷ்யா 37வது நாளாக தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர்...
x
டான்பாஸ் பிராந்தியம், மற்றும் கார்கிவ்வில் ரஷ்யா புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 37வது நாளாக தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர், நாட்டின் கிழக்கு பகுதிகளில், நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், டான்பாஸ் பிராந்தியங்கள், மற்றும் கார்கிவ் நகரில் புதிய தாக்குதல்கள் நடத்த ரஷ்யப் படைகள் தயாராகி வருவதாகத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவம் மெதுவாக அதே சமயம் குறிப்பிடத்தக்க வகையில் பின்வாங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்