லக்னோவை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி- போட்டியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றியை ருசித்து உள்ளது. லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
x
ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றியை ருசித்து உள்ளது. லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதேபோல் குஜராத் தொடக்க வீரர் சுப்மன் கில்லும் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். குஜராத் கேப்டன் ஹர்திக் பான்டியா, தனது சகோதரர் க்ருணல் பான்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்ததும், அதனை க்ருணல் பான்டியா பெரிதாக கொண்டாடாததும், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. லக்னோ பேட்டிங்கின்போது, 4வது ஓவரில் எர்வின் லூயிஸ் அடித்த பந்தை குஜராத் வீரர் சுப்மன் கில் அபாரமாக கேட்ச் பிடித்து வியக்க வைத்தார். கடந்த காலங்களில் எதிரும் புதிருமாக இருந்த க்ருணல் பான்டியாவும் தீபக் ஹூடோவும், களத்தில் ஒருவரையொருவர் ஆரத் தழுவியது, ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. நேற்றைய போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் பெற்ற வெற்றிக்கு, பவுலிங்கில் ஷமியும் பேட்டிங்கில் திவேட்டியாவும் முக்கியக் காரணமாக அமைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்