மீண்டும் பதற வைத்துள்ள டால் எரிமலை! - அவசர அவசரமாக வெளியேறும் மக்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை புகையைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
x
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை புகையைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மணிலாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள "டால் எரிமலை" திடீரென்று மேலெழும்பி விண்ணை முட்டும் புகையை வெளியேற்றி வருவதுடன், அடுத்தடுத்த வெடிப்புகள் நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கக் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்களை அரசு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது. இது சிறிய எரிமலை என்றாலும், கடந்த 1911ம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பில் ஆயிரத்து 300க்கும் அதிகமானோரை பலி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்