எரிவாயு விற்பனையில் ’செக்’ வைத்த புதின் - அதிருப்தியில் பிரான்ஸ்

எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவிப்பிற்கு அதிருப்தி தெரிவித்த மேக்ரான், ரஷ்யா ஒப்பத்தத்தை மீறக்கூடாது என்று வலியுறுத்தினார்.
x
உக்ரைனின் மரியுபோல் நகர ஆக்கிரமிப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் உக்ரைனின் நிலைமை மற்றும் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் நகரத்தை விட்டு வெளியேற கோரி புதினுடன் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவிப்பிற்கு அதிருப்தி தெரிவித்த மேக்ரான், ரஷ்யா ஒப்பத்தத்தை மீறக்கூடாது என்று வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்