முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய ஆல்பத்தை போட்டு காட்டிய ஏ.ஆர்.ரகுமான்

துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்தார்.
x
துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்தார். துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான், அவரது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர், ரகுமானின் இசை அரங்கிற்கு சென்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமான், தான் இசையமைக்கும் மூப்பில்லா தமிழே... தாயே என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு போட்டு காட்டினார். இந்த சந்திப்பின் போது, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்