அணு குண்டு ஆபத்து : காப்பாற்றும் மாத்திரை! - உலகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு

உக்ரைன் - ரஷ்யா போரினால் உலகம் முழுவதும், ஒரு மாத்திரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணுக்கதிர்வீச்சில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் அந்த மாத்திரையைப் பற்றியும் விலையேற்றத்தின் பின்னணியைப் பற்றியும் அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு...
x
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து... உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுவது... அணு உலை விபத்து...  

பயத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக போர் தொடங்கிய முதல் நாளே செர்னோபில் அணு உலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது... உக்ரைனின் மிகப் பெரிய அணு உலையை தாக்கியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அணு ஆயுதங்களை தயார் படுத்துவதாகவும் சொல்லி மிரட்டி வந்தது ரஷ்யா... 
 
இந்த பீதியினாலோ என்னவோ போர் தொடங்கியதுமே அணு கதிர்வீச்சு பாதிப்பை தடுக்க மருத்தகங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்கள். 


அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரலும் உடலை தைராய்டு சுரப்பியும் கதிர்வீச்சை உள்வாங்க தொடங்கிவிடும்... இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இப்படி அணு கதிர்வீச்சுகளை தைராய்டு சுரப்பி உள்வாங்குவதை தடுக்க உதவும் மாத்திரை தான்... பொட்டாசியம் ஐயோடைடு 

இன்று பல மேற்குலக நாடுகளில் இந்த மாத்திரை விற்று தீர்ந்துவிட்டது. 14 மாத்திரைகள் அடங்கிய ஒரு பாக்கெட் பொட்டாசியம் ஐயோடைடு மாத்திரையின் விலை, போருக்கு முன்பு 1000 ரூபாயாக இருந்தது. இன்று அது பத்தாயிரம் ரூபாய்.

இந்த மாத்திரையை சாப்பிட்டால்  24 மணி நேரம் மட்டுமே அது பலன் கொடுக்கும் என்றும்... இது குறித்து அறியாத மக்கள் அவற்றை முன்கூட்டியே எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

அதிக மாத்திரையை உட்கொண்டால் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கும் அவர்கள்... ஐயோடின் சத்து வேண்டும் என்பதற்காக சாப்பாட்டில் உப்பை கூடுதலாக சேர்ப்பது, ஐயோடின் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது போன்ற விபரீத முயற்சிகளையும் தவிருங்கள் என மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்