பொருளாதார சிக்கலில் இலங்கை - மண்ணெண்ணெய் வாங்க குவிந்த மக்கள்

இலங்கை கடும் பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மண்ணெண்ணெய் வாங்குவதற்கு குவிந்த மக்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
இலங்கை கடும் பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மண்ணெண்ணெய் வாங்குவதற்கு குவிந்த மக்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், மண்ணெண்ணெய் வாங்குவதற்கு காலையில் இருந்தே மக்கள் காத்திருந்தனர். இந்தநிலையில் மாலையில் மண்ணெண்ணெய் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் ஆத்திரமடைந்து எரிபொருள் நிரப்பும் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் விரைந்து  நிலமையை கட்டுக்குள் வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்