பாஸ்வேர்ட் பகிர்வு - நெட்பிளிக்ஸ் அதிரடி முடிவு

ஓடிடி ப்ளாட்ஃபார்மில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான நெட்பிளிக்ஸ், இனி தனது வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை பிறரிடம் பகிர்வதற்கு முட்டுக்கட்டை போட திட்டமிட்டுள்ளது.
x
ஓடிடி ப்ளாட்ஃபார்மில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான நெட்பிளிக்ஸ், இனி தனது வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை பிறரிடம் பகிர்வதற்கு முட்டுக்கட்டை போட திட்டமிட்டுள்ளது. நெட்பிளிக்ஸில் தனி நபர் ஒருவர் அக்கவுண்ட் வைத்திருந்தால், ஒரு அக்கவுண்டிற்கு மட்டும் பணம் செலுத்தி விட்டு, பலரும் அந்த அக்கவுண்டை தனிப்பட்டமுறையில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் தங்களுக்கு வருமானம் குறைவதாகவும், ஒரு அக்கவுண்ட்டை ஒரே வீட்டை சேர்ந்த பலரும் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக ப்ரீமியம் மற்றும் ஸ்டாண்டர்ட் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. கூடிய விரைவில் பாஸ்வேர்டுகளை பகிர்ந்து கொள்பவரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்