"மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தாலும் நிதியமைச்சர் தான் பொறுப்பு" -எம்.பி.உதய கம்மன்பில

மக்கள் தற்போது அனுபவித்துவரும் துன்பங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அண்மையில் கோத்தபய ராஜபக்சேவால், அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
x
மக்கள் தற்போது அனுபவித்துவரும் துன்பங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அண்மையில் கோத்தபய ராஜபக்சேவால், அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதியமைச்சரின் தவறு காரணமாகவே எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என புகார் கூறியுள்ளார்.மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தாலும் அதற்கு பசில் ராஜபக்சவே பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்