"நேட்டோவில் உக்ரைன் சேர வாய்ப்பில்லை" - உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவது இனி சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கி அறிவித்துள்ளார்.
x
உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவது இனி சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கி அறிவித்துள்ளார். பிப்ரவரி 24இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை முற்றுகையிட்டு தாக்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா இடையே அடுத்த கட்ட சமாதான பேச்சு வார்த்தை, காணொளி மூலம் தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் சேர இனி சாத்தியம் எதுவும் இல்லை என்று உக்ரைன் அதிபர் ஸேலென்ஸ்கி திட்டவட்டமாக கூறியுள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தடுப்பதே, உக்ரைன் மீது படையெடுக்க முக்கிய காரணமாக ரஷ்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.சமாதானப் பேச்சுவார்த்தைகளில், நேட்டோவில் சேராமல் உக்ரைன் நடுவுநிலைமை காக்க உறுதி அளிக்கும் போக்குகள் வெளிப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்