செய்தி ஒளிப்பதிவாளர், பெண் பத்திரிகையாளர் பலி - உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவாளர் மற்றும் பெண் உக்ரைனிய பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவாளர் மற்றும் பெண் உக்ரைனிய பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த பியர் ஜாக்ர்ஸெவஸ்கி, கடந்த திங்கட் கிழமை ஹோரென்காவில் ஏற்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும் இதே தாக்குதலில் 24 வயதான ஒலெக்ஸாண்ட்ரா "சாஷா" குவ்ஷினோவா, என்ற பெண் பத்திரிகையாளரும் பலியான நிலையில், இந்த 3 வாரங்களில் மட்டும் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்