இலங்கை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் போன்று வேடமிட்டு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர் செயலகம் முன்பு நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார். அப்போது, அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாகச் சென்றனர். மேலும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே போன்று வேடமிட்டு ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்