ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதம் - அமெரிக்க அதிபர் அறிவிப்பு!

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
x
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையே 20வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோ பைடன், ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனிய உயிர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், அந்நாட்டு அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்