யாவோரிவ் நகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் - இடிந்து விழுந்த கட்டடங்கள்
போலந்துடன் தன் எல்லையைப் பகிர்ந்துள்ள உக்ரைன் நாட்டில் யாவோரிவ் நகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
போலந்துடன் தன் எல்லையைப் பகிர்ந்துள்ள உக்ரைன் நாட்டில் யாவோரிவ் நகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேற்கு உக்ரைனில் உள்ள யாவோரிவ் பயிற்சி தளத்தைத் தாக்கி, 180 வெளிநாட்டுக் கூலிபடையினர் கொல்லப்பட்டதாகவும், வெளிநாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தகவல் தெரிவித்தது. இந்நிலையில், யாவோரிவ் பகுதியில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 134 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்நகரமே போரால் உருக்குலைந்து காட்சியளிக்கிறது.
Next Story