1 சவரன் தங்கம் ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

இலங்கையில் முதன் முறையாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
x
இலங்கையில் முதன் முறையாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன் படி, 24 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரால், அங்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இலங்கை சந்தையில் தங்கத்தின் இருப்பு அளவு வேகமாக குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்